- 1321. இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
- வல்லது அவர்அளிக்கு மாறு.
- 1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
- வாடினும் பாடு பெறும்.
- 1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
- நீரியைந் தன்னார் அகத்து.
- 1324. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
- உள்ளம் உடைக்கும் படை.
- 1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
- அகறலின் ஆங்கொன் றுடைத்து.
- 1326. உணலினும் உண்டது அறல்இனிது காமம்
- புணர்தலின் ஊடல் இனிது.
- 1327. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
- கூடலிற் காணப் படும்.
- 1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
- கூடலில் தோன்றிய உப்பு.
- 1329. ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
- நீடுக மன்னோ இரா.
- 1330. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
- கூடி முயங்கப் பெறின்.