- 541. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
- தேர்ந்துசெய் வஃதே முறை.
- 542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
- கோல் நோக்கி வாழுங் குடி.
- 543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
- நின்றது மன்னவன் கோல்.
- 544. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
- அடிதழீஇ நிற்கும் உலகு.
- 545. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
- பெயலும் விளையுளும் தொக்கு.
- 546. வேலன்று வென்றி தருவது மன்னவன்
- கோலதூஉங் கோடா தெனின்.
- 547. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
- முறைகாக்கும் முட்டாச் செயின்.
- 548. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
- தண்பதத்தான் தானே கெடும்.
- 549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
- வடுவன்று வேந்தன் தொழில்.
- 550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
- களைகட் டதனொடு நேர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.