- 111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
- பாற்பட்டு ஒழுகப் பெறின்.
- எவர் பக்கமும் பரிந்து நோக்காமல் இருத்தலே, நடுநிலையாளரின் தகுதி.
- பாற்பட்டு ஒழுகப் பெறின்.
- 112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
- எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
- அனைவரும் ஏற்கக் கூடிய வகையில் நீதி வழங்குபவன் ஆக்கி வைத்தவை, தலைமுறைக்கும் சேதமில்லாமல் நிலைத்திருக்கும்
- எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
- 113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
- அன்றே யொழிய விடல்.
- நன்மையே ஆயினும் நடுநிலை தவறுவதால் அமையுமெனின், கைவிடல் வேண்டும்.
- அன்றே யொழிய விடல்.
- 114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
- எச்சத்தாற் காணப் படும்.
- ஒருவர் போற்றத் தக்கவரா என்பது அவருடைய செயல்களால் தீர்மானிக்கப் படும்.
- எச்சத்தாற் காணப் படும்.
- 115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
- கோடாமை சான்றோர்க் கணி.
- நல்லதும், கெட்டதும் கருதாமல் நடுநிலையுடன் இருத்தலே சான்றோருக்கு அழகு.
- கோடாமை சான்றோர்க் கணி.
- 116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
- நடுவொரீஇ அல்ல செயின்.
- நடுநிலை தவறி செயல்பட்டால் கெடுதல் வரும் என்பதை ஒருவன் அறிந்திருத்தல் வேண்டும்
- நடுவொரீஇ அல்ல செயின்.
- 117. கெடுவாக வையாது உலகம் நடுவாக
- நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
- நடுநிலையோடு வாழ்வதால் ஒருவன் வாழ்நிலை தாழ்ந்திருந்தாலும் உலகம் அவனை பழிக்காது
- நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
- 118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
- கோடாமை சான்றோர்க் கணி.
- வழக்கின் இருபுறமும் சீர்தூக்கிப் பார்த்து நடுநிலையுடன் செயல் படுதல் அறிஞர்க்கு அழகு
- கோடாமை சான்றோர்க் கணி.
- 119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
- உட்கோட்டம் இன்மை பெறின்.
- ஒருதலைப் படுதல் இல்லாமல் ஒருவன் சொல்லும் சொல் நீதியாக கொள்ளப்படும்.
- உட்கோட்டம் இன்மை பெறின்.
- 120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
- பிறவும் தமபோல் செயின்.
- நீதி வழங்குபவர் அனைவருக்கும் அவரவர் துறையில் வல்லவர் போல் செயல் வேண்டும்.
- பிறவும் தமபோல் செயின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.