- 241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
- பூரியார் கண்ணும் உள.
- பொருட்செல்வம் இழிந்தவர்களிடத்தும் உள்ளது, அதனாலே அருட்செல்வமே செல்வங்களுக்குள் எல்லாம் சிறந்த செல்வம்.
- பூரியார் கண்ணும் உள.
- 242. நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
- தேரினும் அஃதே துணை.
- நல்ல வழியிலே தேடி அந்த அருளுடனே இருக்க, பல வழிகளை கற்று தேர்ந்தாலும் அதுவே துணை இங்கே ஆற்றாள் என்பது மார்க்கம், இறைவழி என்றும் கொள்ளப்படுவதுண்டு.
- தேரினும் அஃதே துணை.
- 243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
- இன்னா உலகம் புகல்.
- அருள் கொண்ட நெஞ்சினார்கு இருள்சேர்ந்த துன்பமான உலகம் இல்லை.
- இன்னா உலகம் புகல்.
- 244. மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
- தன்னுயிர் அஞ்சும் வினை.
- உலகத்திலுள்ள உயிரகளை காத்து அருள்புரிபவர்க்கு இல்லை தன்னுயிரை காத்துக்கொள்ள வேண்டுமே என்னும் பயம்
- தன்னுயிர் அஞ்சும் வினை.
- 245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
- மல்லன்மா ஞாலங் கரி.
- இந்த வளமான உலகமே சாட்சியாகும் துன்பமானது அருள்கொண்ட மனிதருக்கு இல்லை என்பதற்கு
- மல்லன்மா ஞாலங் கரி.
- 246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
- அல்லவை செய்தொழுகு வார்.
- பொருள்நீங்கி (தான் துன்படுவதை) மறந்து வாழ்பவர் என்று கூறுப்படுபவர் யாரென்றால் அல்லாதவைகளை செய்து அருள் இல்லாமல் வாழ்பவர்களே
- அல்லவை செய்தொழுகு வார்.
- 247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
- இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
- அருளில்லார்க்கு மேலுலகமும் பொருளில்லாதவர்க்கு இந்த உலகமும் இன்பமானதாய் இருக்காது
- இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
- 248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
- அற்றார்மற் றாதல் அரிது.
- பொருளல்லாதவர்கள் கூட சிலநேரங்களில் செல்வம் கொழிப்பர் அருளில்லாதவர் அழிந்தவர்ளாகாமல் மீள்வது அரிது
- அற்றார்மற் றாதல் அரிது.
- 249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
- அருளாதான் செய்யும் அறம்.
- அருளில்லாதவன் செய்யும் அறமானது ஞானமில்லாதவன் மெய்ப்பொருளை கண்டது போலாகும்
- அருளாதான் செய்யும் அறம்.
- 250. வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
- மெலியார்மேல் செல்லு மிடத்து.
- ஒரு வலியவன் முன் தன் நிலைமையை எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவேண்டும் எப்போதாகிலும் ஒரு மெலிவன் தன்னிடம் வரும்போது.
- மெலியார்மேல் செல்லு மிடத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.