- 571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
- உண்மையான் உண்டிவ் வுலகு.
- 572. கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
- உண்மை நிலக்குப் பொறை.
- 573. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
- கண்ணோட்டம் இல்லாத கண்.
- 574. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
- கண்ணோட்டம் இல்லாத கண்.
- 575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
- புண்ணென்று உணரப் படும்.
- 576. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
- டியைந்துகண் ணோடா தவர்.
- 577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
- கண்ணோட்டம் இன்மையும் இல்.
- 578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
- உரிமை உடைத்திவ் வுலகு.
- 579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
- பொறுத்தாற்றும் பண்பே தலை.
- 580. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
- நாகரிகம் வேண்டு பவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.