- 591. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
- உடையது உடையரோ மற்று.
- 592. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
- நில்லாது நீங்கி விடும்.
- 593. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
- ஒருவந்தம் கைத்துடை யார்.
- 594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
- ஊக்க முடையா னுழை.
- 595. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
- உள்ளத் தனையது உயர்வு.
- 596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
- தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
- 597. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
- பட்டுப்பா டூன்றுங் களிறு.
- 598. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
- வள்ளியம் என்னுஞ் செருக்கு.
- 599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
- வெருஉம் புலிதாக் குறின்.
- 600. உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
- மரம்மக்க ளாதலே வேறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.