- 531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த
- உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
- 532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
- நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
- 533. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
- எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
- 534. அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
- பொச்சாப் புடையார்க்கு நன்கு.
- 535. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
- பின்னூறு இரங்கி விடும்.
- 536. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
- வாயின் அதுவொப்பது இல்.
- 537. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
- கருவியால் போற்றிச் செயின்.
- 538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
- இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
- 539. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
- மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
- 540. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
- உள்ளியது உள்ளப் பெறின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.