- 611. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
- பெருமை முயற்சி தரும்.
- 612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
- தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
- 613. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
- வேளாண்மை என்னுஞ் செருக்கு.
- 614. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
- வாளாண்மை போலக் கெடும்.
- 615. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
- துன்பம் துடைத்தூன்றும் தூண்.
- 616. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
- இன்மை புகுத்தி விடும்.
- 617. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
- தாளுளான் தாமரையி னாள்.
- 618. பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
- ஆள்வினை இன்மை பழி.
- 619. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
- மெய்வருத்தக் கூலி தரும்.
- 620. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
- தாழாது உஞற்று பவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.