- 251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
- எங்ஙனம் ஆளும் அருள்?
- 252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
- ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
- 253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
- உடல்சுவை உண்டார் மனம்.
- 254. அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
- பொருளல்லது அவ்வூன் தினல்.
- 255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
- அண்ணாத்தல் செய்யாது அளறு.
- 256. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
- விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
- 257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
- புண்ணது உணர்வார்ப் பெறின்.
- 258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
- உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
- 259. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
- உயிர்செகுத் துண்ணாமை நன்று.
- 260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
- எல்லா உயிருந் தொழும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.