- 281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
- கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
- 282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
- கள்ளத்தால் கள்வேம் எனல்.
- 283. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
- ஆவது போலக் கெடும்.
- 284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
- வீயா விழுமம் தரும்.
- 285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
- பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
- 286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
- கன்றிய காத லவர்.
- 287. களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
- ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
- 288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
- களவறிந்தார் நெஞ்சில் கரவு.
- 289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
- மற்றைய தேற்றா தவர்.
- 290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
- தள்ளாது புத்தே ளுலகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.