- 481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
- வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
- 482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
- தீராமை ஆர்க்குங் கயிறு.
- 483. அருவினை யென்ப உளவோ கருவியான்
- காலம் அறிந்து செயின்.
- 484. ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
- கருதி இடத்தாற் செயின்.
- 485. காலம் கருதி இருப்பர் கலங்காது
- ஞாலம் கருது பவர்.
- 486. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
- தாக்கற்குப் பேருந் தகைத்து.
- 487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
- உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
- 488. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
- காணின் கிழக்காம் தலை.
- 489. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
- செய்தற் கரிய செயல்.
- 490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
- குத்தொக்க சீர்த்த இடத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.