ஞாயிறு, 12 டிசம்பர், 2010

அழுக்காறாமை


161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
  • மனதில் பொறாமை இல்லாத இயல்பை ஒரு ஒழுக்கமாகப் பேண வேண்டும்
162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
  • ஒருவரிடம் பொறாமை குணம் இல்லை எனில், அவரிடம் அதை விட சிறப்பு வேறு இல்லை.

163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
  • பிறரிடம் பொறாமை பேணுபவன் அறத்தினால் ஆன செயல்களை வேண்டாம் என தள்ளி விடுவான்.
164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
  • பொறாமையினால் விளையும் தீமைகளை அறிந்தோர், அதனால் தூண்டப்பட்டு தீமைகளைச் செய்ய மாட்டார்கள்

165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.
  • பொறாமை உடையோருக்கு அதுவே கேடு விளைவிக்கும் பகையாய் விளங்கும்.
166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
  • பிறன் கொடுப்பதில் கூட பொறாமை கொள்ளும் ஒருவன், தன் சுற்றத்தாருடன் உண்ணவும், உடுக்கவும் இல்லாத நிலையை அடைவான்.

167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
  • பொறாமை உடையவனை திருமகள் வெறுத்து மூத்தவளுக்குக் காட்டுவாள்.

168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
  • பொறாமை உடையவனின் செல்வம் அழிந்து, தீயில் வாட்டும் கொடுமையில் விடும்.

169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
  • பொறாமை கொண்டவனால் நற்செயலும், நல்லவனால் கேடு விளைவதும் அரிது.

170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
  • பொறாமையால் உயர்ந்தோரும் இல்லை, பொறாமை தவிர்த்ததால் ஒருவர் வீழ்ந்ததும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் பதிவுக்கு நன்றி.

உலாவுவோர்

பிரபலமான இடுகைகள்