- 561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
- ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
- 562. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
- நீங்காமை வேண்டு பவர்.
- 563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
- ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
- 564. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
- உறைகடுகி ஒல்லைக் கெடும்.
- 565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
- பேஎய்கண் டன்னது உடைத்து.
- 566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
- நீடின்றி ஆங்கே கெடும்.
- 567. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
- அடுமுரண் தேய்க்கும் அரம்.
- 568. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
- சீறிற் சிறுகும் திரு.
- 569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
- வெருவந்து வெய்து கெடும்.
- 570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
- இல்லை நிலக்குப் பொறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.