- 201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
- தீவினை என்னும் செருக்கு.
- தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்கள் அவ்வாறு செய்ய பயப்படுவர்.
- தீவினை என்னும் செருக்கு.
- 202. தீயவை தீய பயத்தலால் தீயவை
- தீயினும் அஞ்சப் படும்.
- தீய செயல்களால் தீமையே விளையும் ஆதலால் அவை தீயினும் கொடியதாக அஞ்சுவர்
- தீயினும் அஞ்சப் படும்.
- 203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
- செறுவார்க்கும் செய்யா விடல்.
- நம்மை வெறுத்தவருக்கும் தீமை செய்யாதிருப்பது நாம் அறிந்திருக்க வேண்டியவற்றுள் முதன்மையானது.
- செறுவார்க்கும் செய்யா விடல்.
- 204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
- அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
- மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக் கூடாது அப்படிச் செய்தால் அறமே அவனுக்கு கேடு விளைவிக்கும்.
- அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
- 205. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
- இலனாகும் மற்றும் பெயர்த்து.
- துணை எதுவும் இல்லாதவன் என்று ஒருவனுக்கு தீயவை செய்தால், தாமே இல்லாதவனாகும் நிலை ஏற்படும்.
- இலனாகும் மற்றும் பெயர்த்து.
- 206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
- தன்னை அடல்வேண்டா தான்.
- துன்பம் தன்னை வாட்டக் கூடாது என நினைப்பவன், பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது.
- தன்னை அடல்வேண்டா தான்.
- 207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
- வீயாது பின்சென்று அடும்
- எந்தப் பகையானாலும் மீண்டு விடலாம், தீவினையான பகை உடன் வந்து கேடு விளைவிக்கும்.
- வீயாது பின்சென்று அடும்
- 208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
- வீயாது அடிஉறைந் தற்று.
- தீயவை செய்தவருக்கு நிழல் போன்ற விலகாத கேடு சூழும்.
- வீயாது அடிஉறைந் தற்று.
- 209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
- துன்னற்க தீவினைப் பால்.
- தன்னை நேசிப்பவன் என்றும் தீவினையை நெருங்குவதில்லை
- துன்னற்க தீவினைப் பால்.
- 210. அருன்கேடன் என்பது அறிக மருங்கோடித்
- தீவினை செய்யான் எனின்.
- மதி மயங்கி தீய செயல் செய்யாதவன் கெடுதல் அரிது.
- தீவினை செய்யான் எனின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.