- 341. யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
- அதனின் அதனின் இலன்.
- 342. வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
- ஈண்டியற் பால பல.
- 343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
- வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
- 344. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
- மயலாகும் மற்றும் பெயர்த்து.
- 345. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
- உற்றார்க்கு உடம்பும் மிகை.
- 346. யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
- உயர்ந்த உலகம் புகும்.
- 347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
- பற்றி விடாஅ தவர்க்கு.
- 348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
- வலைப்பட்டார் மற்றை யவர்.
- 349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
- நிலையாமை காணப் படும்.
- 350. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
- பற்றுக பற்று விடற்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.