- 411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
- செல்வத்து ளெல்லாந் தலை.
- 412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது
- வயிற்றுக்கும் ஈயப் படும்.
- 413. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
- ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
- 414. கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
- ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
- 415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
- ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
- 416. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
- ஆன்ற பெருமை தரும்.
- 417. பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
- தீண்டிய கேள்வி யவர்.
- 418. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
- தோட்கப் படாத செவி.
- 419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
- வாயின ராதல் அரிது.
- 420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
- அவியினும் வாழினும் என்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.