- 421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
- உள்ளழிக்க லாகா அரண்.
- 422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
- நன்றின்பால் உய்ப்ப தறிவு.
- 423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு.
- 424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
- நுண்பொருள் காண்ப தறிவு.
- 425. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
- கூம்பலும் இல்ல தறிவு.
- 426. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
- அவ்வ துறைவ தறிவு.
- 427. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
- அஃதறி கல்லா தவர்.
- 428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
- அஞ்சல் அறிவார் தொழில்.
- 429. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
- அதிர வருவதோர் நோய்.
- 430. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
- என்னுடைய ரேனும் இலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.