- 881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
- இன்னாவாம் இன்னா செயின்.
- 882. வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
- கேள்போல் பகைவர் தொடர்பு.
- 883. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
- மட்பகையின் மாணத் தெறும்.
- 884. மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
- ஏதம் பலவும் தரும்.
- 885. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
- ஏதம் பலவும் தரும்.
- 886. ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
- பொன்றாமை ஒன்றல் அரிது.
- 887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
- உட்பகை உற்ற குடி.
- 888. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
- உட்பகை உற்ற குடி.
- 889. எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
- உட்பகை உள்ளதாங் கேடு.
- 890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
- பாம்போடு உடனுறைந் தற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.