- 911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
- இன்சொல் இழுக்குத் தரும்.
- 912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
- நயன்தூக்கி நள்ளா விடல்.
- 913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
- ஏதில் பிணந்தழீஇ அற்று.
- 914. பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
- ஆயும் அறிவி னவர்.
- 915. பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
- மாண்ட அறிவி னவர்.
- 916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
- புன்னலம் பாரிப்பார் தோள்.
- 917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
- பேணிப் புணர்பவர் தோள்.
- 918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
- மாய மகளிர் முயக்கு.
- 919. வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
- பூரியர்கள் ஆழும் அளறு.
- 920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
- திருநீக்கப் பட்டார் தொடர்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.