- 631. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
- அருவினையும் மாண்டது அமைச்சு.
- 632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
- ஐந்துடன் மாண்டது அமைச்சு.
- 633. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
- பொருத்தலும் வல்ல தமைச்சு.
- 634. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
- சொல்லலும் வல்லது அமைச்சு.
- 635. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
- திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
- 636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
- யாவுள முன்நிற் பவை.
- 637. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
- இயற்கை அறிந்து செயல்.
- 638. அறிகொன்று அறியான் எனினும் உறுதி
- உழையிருந்தான் கூறல் கடன்.
- 639. பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
- எழுபது கோடி உறும்.
- 640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
- திறப்பாடு இலாஅ தவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.