- 661. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
- மற்றைய எல்லாம் பிற.
- 662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
- ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
- 663, கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
- எற்றா விழுமந் தரும்.
- 664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
- சொல்லிய வண்ணம் செயல்.
- 665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
- ஊறெய்தி உள்ளப் படும்.
- 666. எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
- திண்ணியர் ஆகப் பெறின்.
- 667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
- அச்சாணி அன்னார் உடைத்து.
- 668. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
- தூக்கங் கடிந்து செயல்.
- 669. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
- இன்பம் பயக்கும் வினை.
- 670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
- வேண்டாரை வேண்டாது உலகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.