- 981. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
- சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
- 982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
- எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
- 983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
- ஐந்துசால் ஊன்றிய தூண்.
- 984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
- சொல்லா நலத்தது சால்பு.
- 985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
- மாற்றாரை மாற்றும் படை.
- 986. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
- துலையல்லார் கண்ணும் கொளல்.
- 987. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
- என்ன பயத்ததோ சால்பு.
- 988. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
- திண்மை உண் டாகப் பெறின்.
- 989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
- ஆழி எனப்படு வார்.
- 990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
- தாங்காது மன்னோ பொறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.