- 831. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
- ஊதியம் போக விடல்.
- 832. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
- கையல்ல தன்கட் செயல்.
- 833. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
- பேணாமை பேதை தொழில்
- 834. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
- பேதையின் பேதையார் இல்.
- 835. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
- தான்புக் கழுந்தும் அளறு.
- 836. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
- பேதை வினைமேற் கொளின்.
- 837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
- பெருஞ்செல்வம் உற்றக் கடை.
- 838. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
- கையொன்று உடைமை பெறின்.
- 839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
- பீழை தருவதொன் றில்.
- 840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
- குழாஅத்துப் பேதை புகல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.