- 921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
- கட்காதல் கொண்டொழுகு வார்.
- 922. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
- எண்ணப் படவேண்டா தார்.
- 923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
- சான்றோர் முகத்துக் களி.
- 924. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
- பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
- 925. கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
- மெய்யறி யாமை கொளல்.
- 926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
- நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
- 927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
- கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
- 928. களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
- ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
- 929. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
- குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
- 930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
- உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.