- 821. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
- நேரா நிரந்தவர் நட்பு.
- 822. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
- மனம்போல வேறு படும்.
- 823. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
- ஆகுதல் மாணார்க் கரிது.
- 824. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
- வஞ்சரை அஞ்சப் படும்.
- 825. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
- சொல்லினால் தேறற்பாற்று அன்று.
- 826. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
- ஒல்லை உணரப் படும்.
- 827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
- தீங்கு குறித்தமை யான்.
- 828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
- அழுதகண் ணீரும் அனைத்து.
- 829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
- நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
- 830. பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
- அகநட்பு ஒரீஇ விடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.