- 1141. அலரெழ ஆருயிர் நற்கும் அதனைப்
- பலரறியார் பாக்கியத் தால்.
- 1142. மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
- அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
- 1143. உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
- பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
- 1144. கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
- தவ்வென்னும் தன்மை இழந்து.
- 1145. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
- வெளிப்படுந் தோறும் இனிது.
- 1146. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
- திங்களைப் பாம்புகொண் டற்று.
- 1147. ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
- நீராக நீளும்இந் நோய்.
- 1148. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
- காமம் நுதுப்பேம் எனல்.
- 1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
- பலர்நாண நீத்தக் கடை.
- 1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
- கெளவை எடுக்கும்இவ் வூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.