- 1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
- மென்னீரள் யாம்வீழ் பவள்.
- 1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
- பலர்காணும் பூவொக்கும் என்று.
- 1113. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
- வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
- 1114. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
- மாணிழை கண்ணொவ்வேம் என்று.
- 1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
- நல்ல படாஅ பறை.
- 1116. மதியும் மடந்தை முகனும் அறியா
- பதியின் கலங்கிய மீன்.
- 1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
- மறுவுண்டோ மாதர் முகத்து.
- 1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
- காதலை வாழி மதி.
- 1119. மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
- பலர்காணத் தோன்றல் மதி.
- 1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
- அடிக்கு நெருஞ்சிப் பழம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.