- 1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
- வாலெயிறு ஊறிய நீர்.
- 1122. உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
- மடந்தையொடு எம்மிடை நட்பு.
- 1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
- திருநுதற்கு இல்லை இடம்.
- 1124. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
- அதற்கன்னள் நீங்கும் இடத்து.
- 1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
- ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
- 1126. கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
- நுண்ணியர்எம் காத லவர்.
- 1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
- எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
- 1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
- அஞ்சுதும் வேபாக் கறிந்து.
- 1129. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
- ஏதிலர் என்னும் இவ் வூர்.
- 1130. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
- ஏதிலர் என்னும் இவ் வூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.