- 801. பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
- கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
- 802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
- உப்பாதல் சான்றோர் கடன்.
- 803. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
- செய்தாங்கு அமையாக் கடை.
- 804. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
- கேளாது நட்டார் செயின்.
- 805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
- நோதக்க நட்டார் செயின்.
- 806. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
- தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
- 807. அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
- வழிவந்த கேண்மை யவர்.
- 808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
- நாளிழுக்கம் நட்டார் செயின்.
- 809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
- விடாஅர் விழையும் உலகு.
- 810. விழையார் விழையப் படுப பழையார்கண்
- பண்பின் தலைப்பிரியா தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.