- 1031. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
- உழந்தும் உழவே தலை.
- 1032. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
- எழுவாரை எல்லாம் பொறுத்து.
- 1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
- தொழுதுண்டு பின்செல் பவர்.
- 1034. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
- அலகுடை நீழ லவர்.
- 1035. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
- கைசெய்தூண் மாலை யவர்.
- 1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
- விட்டேம்என் பார்க்கும் நிலை.
- 1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
- வேண்டாது சாலப் படும்.
- 1038. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
- நீரினும் நன்றதன் காப்பு.
- 1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
- இல்லாளின் ஊடி விடும்.
- 1040. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
- நிலமென்னும் நல்லாள் நகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.