- 861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
- மெலியார்மேல் மேக பகை.
- 862. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
- என்பரியும் ஏதிலான் துப்பு.
- 863. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
- தஞ்சம் எளியன் பகைக்கு.
- 864. நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
- யாங்கணும் யார்க்கும் எளிது.
- 865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
- பண்பிலன் பற்றார்க்கு இனிது.
- 866. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
- பேணாமை பேணப் படும்.
- 867. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
- மாணாத செய்வான் பகை.
- 868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
- இனனிலனாம் ஏமாப் புடைத்து.
- 869. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
- அஞ்சும் பகைவர்ப் பெறின்.
- 870. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
- ஒல்லானை ஒல்லா தொளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.