- 1191. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
- காமத்துக் காழில் கனி.
- 1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
- வீழ்வார் அள க்கும் அளி.
- 1193. வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
- வாழுநம் என்னும் செருக்கு.
- 1194. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
- வீழப் படாஅர் எனின்.
- 1195. நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
- தாம்காதல் கொள்ளாக் கடை.
- 1196. ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
- இருதலை யானும் இனிது.
- 1197. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
- ஒருவர்கண் நின்றொழுகு வான்.
- 1198. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
- வாழ்வாரின் வன்கணார் இல்.
- 1199. நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
- இசையும் இனிய செவிக்கு.
- 1200. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
- செறாஅஅய் வாழிய நெஞ்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.