- 961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
- குன்ற வருப விடல்.
- 962. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
- பேராண்மை வேண்டு பவர்.
- 963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
- சுருக்கத்து வேண்டும் உயர்வு.
- 964. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
- நிலையின் இழிந்தக் கடை.
- 965. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
- குன்றி அனைய செயின்.
- 966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
- இகழ்வார்பின் சென்று நிலை.
- 967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலன் அந்நிலையே
- கெட்டான் எனப்படுதல் நன்று.
- 968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
- பீடழிய வந்த இடத்து.
- 969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
- உயிர்நீப்பர் மானம் வரின்.
- 970. இளிவரின் வாழாத மானம் உடையார்
- ஒளிதொழுது ஏத்தும் உலகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.