- 711. அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
- தொகையறிந்த தூய்மை யவர்.
- 712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
- நடைதெரிந்த நன்மை யவர்.
- 713. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
- வகையறியார் வல்லதூஉம் இல்.
- 714. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
- வான்சுதை வண்ணம் கொளல்.
- 715. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
- முந்து கிளவாச் செறிவு.
- 716. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
- ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
- 717. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
- சொல்தெரிதல் வல்லார் அகத்து.
- 718. உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
- பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
- 719. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
- நன்குசலச் சொல்லு வார்.
- 720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
- அல்லார்முன் கோட்டி கொளல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.