- 1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
- நண்ணேன் பரத்தநின் மார்பு.
- 1312. ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
- நீடுவாழ் கென்பாக் கறிந்து.
- 1313. கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
- காட்டிய சூடினீர் என்று.
- 1314. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
- யாரினும் யாரினும் என்று.
- 1315. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
- கண்நிறை நீர்கொண் டனள்.
- 1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
- புல்லாள் புலத்தக் கனள்.
- 1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
- யாருள்ளித் தும்மினீர் என்று.
- 1318. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
- எம்மை மறைத்திரோ என்று.
- 1319. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
- இந்நீரர் ஆகுதிர் என்று.
- 1320. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
- யாருள்ளி நோக்கினீர் என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.