- 641. நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
- யாநலத்து உள்ளதூஉம் அன்று.
- 642. ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
- காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
- 643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
- வேட்ப மொழிவதாம் சொல்.
- 644. திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
- பொருளும் அதனினூஉங்கு இல்.
- 645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
- வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
- 646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
- மாட்சியின் மாசற்றார் கோள்.
- 647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
- இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
- 648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
- சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
- 649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
- சிலசொல்லல் தேற்றா தவர்.
- 650. இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
- உணர விரித்துரையா தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.