- 971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
- அஃதிறந்து வாழ்தும் எனல்.
- 972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
- செய்தொழில் வேற்றுமை யான்.
- 973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
- கீழல்லார் கீழல் லவர்.
- 974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
- தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
- 975. பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
- அருமை உடைய செயல்.
- 976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
- பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
- 977. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
- சீரல் லவர்கண் படின்.
- 978. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
- அணியுமாம் தன்னை வியந்து.
- 979. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
- பெருமிதம் ஊர்ந்து விடல்.
- 980. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
- குற்றமே கூறி விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.