- 1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
- ஒப்பாரி யாங்கண்ட தில்.
- 1072. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
- நெஞ்சத்து அவலம் இலர்.
- 1073. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
- மேவன செய்தொழுக லான்.
- 1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
- மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
- 1075. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
- அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
- 1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
- மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
- 1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
- கூன்கையர் அல்லா தவர்க்கு.
- 1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
- கொல்லப் பயன்படும் கீழ்.
- 1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
- வடுக்காண வற்றாகும் கீழ்.
- 1080. எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
- விற்றற்கு உரியர் விரைந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.