- 1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
- அவர்பழி தம்பழி அன்று.
- 1052. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
- துன்பம் உறாஅ வரின்.
- 1053. கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
- இரப்புமோ ரேஎர் உடைத்து.
- 1054. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
- கனவிலும் தேற்றாதார் மாட்டு.
- 1055. கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
- இரப்பவர் மேற்கொள் வது.
- 1056. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
- எல்லாம் ஒருங்கு கெடும்.
- 1057. இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
- உள்ளுள் உவப்பது உடைத்து.
- 1058. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
- மரப்பாவை சென்றுவந் தற்று.
- 1059. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
- மேவார் இலாஅக் கடை.
- 1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
- தானேயும் சாலும் கரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.