- 1131. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
- மடலல்லது இல்லை வலி.
- 1132. நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
- நாணினை நீக்கி நிறுத்து.
- 1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
- காமுற்றார் ஏறும் மடல்.
- 1134. காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
- நல்லாண்மை என்னும் புணை.
- 1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
- மாலை உழக்கும் துயர்.
- 1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
- படல்ஒல்லா பேதைக்கென் கண்.
- 1137. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
- பெண்ணின் பெருந்தக்க தில்.
- 1138. நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
- மறையிறந்து மன்று படும்.
- 1139. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
- மறுகின் மறுகும் மருண்டு.
- 1140. யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
- யாம்பட்ட தாம்படா ஆறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.