- 1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
- எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
- 1242. காதல் அவரிலர் ஆகநீ நோவது
- பேதைமை வாழியென் நெஞ்சு.
- 1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
- பைதல்நோய் செய்தார்கண் இல்.
- 1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
- தின்னும் அவர்க்காணல் உற்று.
- 1245. செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
- உற்றால் உறாஅ தவர்.
- 1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
- பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
- 1247. காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
- யானோ பொறேன்இவ் விரண்டு.
- 1248. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
- பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
- 1249. உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
- யாருழைச் சேறியென் நெஞ்சு.
- 1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
- இன்னும் இழத்தும் கவின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.